செய்திகள்

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

ஒருநாள் பயணமாக நேற்று(ஜனவரி 15) கேரளா சென்ற பிரதமர் மோடி, புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கேரள கவர்னர் நீதிபதி சதாசிவம், மாநில தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக, கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் புதிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சசி தரூர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி நேற்று கடுமையாக தாக்கி பேசி உள்ள நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பிரதமர் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close