சினிமா

நடிகர் அஜித் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள தயங்குவது ஏன்? – பிரபல இயக்குனர் மனம் திறந்து பேசுகிறார்

அஜித் ஏன் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார் என்பதற்கான காரணத்தை இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித்நயன்தாராஜெகபதி பாபுரோபோ ஷங்கர்தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம்‘.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுஅமோக வசூல் செய்து வருகிறது விஸ்வாசம்‘. அஜித் – சிவா இருவருமே தற்போது நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். மேலும்அஜித் ஏன் பொது விழாக்களில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார் என்பதை இயக்குநர் சிவா அளித்துள்ள பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாதது குறித்து சிவா கூறியிருப்பதாவது: “அஜித் சார் ஏர்போர்ட் உள்ளிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது அவரை பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. இதனால் யாருக்கும் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதே முதல் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதே சில சமயங்களில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறோம்.

அஜித் சார் எப்போதும் எனக்கு நண்பர் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். அவர் எப்போதும் எனக்கொரு அண்ணன். அவருக்கு எப்போதுமே நான் விஸ்வாசமாக இருப்பேன். என்னுடைய தொழில் மீது அவருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதே போல அவருடைய தொழில் மீது எனக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இவ்வளவு பெரிய நடிகர் என்னை நம்பி இத்தனை படங்கள் கொடுக்கிறார் என்றால் அவருக்கு நான் எப்போதும் கடமைபட்டிருக்கிறேன்” இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

Inputs from The Hindu

Tags
Show More
Back to top button
Close
Close