செய்திகள்

பிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் ₹1,550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்ட உரிமையில் கைவைக்காமலேயே, அந்த உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இந்த பணி செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கூட்டு முயற்சி-அனைவருக்கும் வளர்ச்சி என்பதன் மூலமே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சமவாய்ப்புகளை பெற முடியும் என்றும், சமவாய்ப்புகள் கிடைக்காதபோது சமூகத்தில் பிளவுகள் அதிகரிக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

நலத்திட்டங்களில் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் திட்டங்களில் 6 கோடி போலிப் பயனாளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் ₹90,000 கோடி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். முறைகேடுகள் மூலம் வருவாய் ஈட்டி வந்தவர்கள் தம் மீது நிச்சயம் கோபத்தில் இருப்பார்கள் என்று கூறிய பிரதமர்,அத்தகையோர் கண்களில் தாம் முள்ளாய் உறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close