தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புகழகம், தர்ஷ்ன்பாரத் கேட்வே சரக்குபெட்டகம் முனையம், தூத்துக்குடி கப்பல் முகவர் சங்கம், தூத்துக்குடி சுங்க தரகர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி சிபிஎஸ் அசோசியேசன் கூட்டு முயற்சியில் வர்த்தக மேம்பாடு சார்பில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் துறைமுகத்தின் தற்போதைய கப்பல் தளங்கள் 8 மற்றும் 9 ஆகியவற்றின் ஆழம் 14.2 மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 310 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல்களை இங்கு இயக்க முடியும். இதன் அடிப்படையில் முதன்மை வழித்தட கப்பல் வாரந்தோறும் தர்ஷ்ன்பாரத் கேட்வே சரக்கு பெட்டகம் முனையத்திலிருந்து தூர கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. இதனால் கிழக்கு ஆசிய நாடுகளான, மலேசியா, ஹாங்காங், சைனா போன்ற நாடுகளுக்கு 3 – 4 நாட்களுக்கு முன்னரே சரக்குகள் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இரண்டு சரக்கு பெட்டகம்முனையம் இயங்கி வருகிறது. அவை தர்ஷ்ன் பாரத் கேட்வே சரக்குபெட்டகம் முனையம் மற்றும் பிஎஸ்ஏ சிகால் ஆகியவை ஆண்டுதோறும் 1.3 மில்லியன் டியூப்களை கையாளும் திறன் கொண்டவை. 14.2 மீட்டர் ஆழத்தை பயன்படுத்தி தற்போதைய சரக்கு கையாளும் சதவிகிதம் 54-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 லட்சம் டியூப்களை கையாளும் திறன் கொண்டது. துறைமுகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சரக்கு பெட்டகம் முனையம் உருவாக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகள், மேற்குஆசிய நாடுகள், ஐரோப்பா மற்றும்அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான முதன்மை வழித்தட கப்பல்கள்கையாளுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று துறைமுக துணைத்தலைவர் வையாபுரி, தனது சிறப்புரையில் துறைமுக உள்கட்டமைப்பு மேம்படுத்துவது பற்றிய புதிய திட்டத்தை விவரித்தார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேசுகையில்,  சாகர்மாலா திட்டத்தின் கீழ் தொழில்துறை விரிவாக்கத்திற்கு துறைமுகப் பகுதியில் உள்ள 244.58 ஏக்கர் நிலப்பரப்பினை முதல் கட்டமாக தேர்வு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு புதிய நிறுவனங்கள் துவங்குவதற்கும் வாய்ப்பு இருக்கும் என்றார்.

Input Credits – http://www.maybemaynot.com/

Share