Amazon Great Indian Sale - 2019

நாட்டின் மிக வேகமான ரயில் என்ற பெருமையைப் பெற்ற ட்ரெய்ன் 18 என்ற ரயிலை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பேசிய அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலின் முதல் ஓட்டம் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் என்றார். மற்ற ரயில்களை விட ட்ரெயின் 18 ரயிலின் வேகம் இருமடங்காக இருக்கும் என்று தெரிவித்த அவர், டெல்லியிலிருந்து வாரணாசிக்கு 8 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்று குறிப்பிட்டார். இந்த ரயிலை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ட்ரெயின் 18 சிறப்பம்சங்கள்

Advertisement Amazon Great Indian Sale - 2019

இந்தியாவின் மிக அதிவேக ரெயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரெயின் 18 என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது. நாட்டின் அதிவேக ரெயிலான சதாப்தி விரைவு ரெயிலின் சாதனையை  முறியடித்து, அதனை விட 15 சதவிகிதம் பயண நேரம் குறைவாக்க கூடிய, என்ஜின் இல்லாமல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவின் அதிவேக ரயிலாகும். சதாப்தி விரைவு ரயிலோடு ஒப்பிடும்போது பயண நேரம் 15% குறைவாக இருக்கும்.

இந்த ‘ட்ரெய்ன் 18’ சென்னையில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ₹100 கோடி செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த அதிவேக ரயிலின் அறிமுக விழா பெரம்பூரில் நடைபெற்றது குறிபிடத்தக்கது. நாட்டில் தற்போதைய அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். முப்பதாண்டு காலமாக சதாப்தி ரயில் தக்க வைத்திருந்த இந்த சாதனை, தற்போது முறியடிக்கப்படவுள்ளது. சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக ட்ரெய்ன் 18 எனப்படும் இந்தியாவின் அதிவேக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரயிலில் மொத்தமுள்ள 16 பெட்டிகளில் இரண்டு உயர்வகுப்பு பெட்டிகள் உள்ளன. இவற்றில் தலா 52 இருக்கைகளும், ஏனைய பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உயர்வகுப்பு ரயில் பெட்டிகளில் 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள் உள்ளன.முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தும் உறிஞ்சு கழிவறைகள், பரவலான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள், ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பயணிகளின் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில்களை போல, ரயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் சிக்கலின்றி பயணிக்கும் வகையில் இந்த ரயிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன

Input Credits – Live Mint

Share