பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் இந்த பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ் நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல் வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர நான் பிரார்த்திக்கின்றேன். தேசத்துக்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

Share