செய்திகள்

ஓடும் ரயிலில் பொது மக்கள் ஏறி இறங்கி விபத்துக்குள்ளாவதை தடுக்க முதிய முயற்சி : ரயில்வே துறை அசத்தல்

ரயில் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் பயணியர், விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், ரயில்கள், நடைமேடையிலிருந்து புறப்படும் போது, அதில், நீல நிற விளக்கு ஒளிரச் செய்யும், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஓடும் ரயிலில் ஏற முற்பட்டு, விபத்தில் சிக்கி, பலர் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ரயில் நிலையம் நடைமேடைகளில், இதுபோன்ற விபத்து ஏற்படுவதை தடுக்க, மத்திய ரயில்வே துறை அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நடைமேடையில் இருந்து, ரயில் புறப்படுவதை உணர்த்தும் வகையில், ரயில் பெட்டிகளின் வாயிலில், நீல நிற விளக்கை ஒளிரச் செய்ய திட்டமிடப்பட்டது.

 

சோதனை முயற்சியாக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது நல்ல பலன் அளித்துள்ளதாகவும், மும்பையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்திலும் இதை செயல்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாகவும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close