இந்தியா

₹4,000 கோடி புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக ராணுவ தளவாடம் : பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைக்கிறார்

தமிழகத்தில் துவங்கப்பட உள்ள ராணுவ தளவாடம் மூலம் ₹4,000 கோடிகளுக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

ஜனவரி 20 ஆம் தேதி அன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் ராணுவ தளவாடத்தை துவங்கி வைக்கிறார். “ராணுவ தளவாடம் மூலம் பிரதான முதலீட்டு அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்”, என பாதுகாப்பு துறை அமைச்சக செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தொடங்கப்படும் இந்த ராணுவ தளவாடத்தின் முக்கிய அம்சமாக கோவையில் ஒரு பாதுகாப்பு இன்னொவேஷன் மையம் அமைக்கப்பட்டு, அங்கு பல ராணுவ தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது நிதி அறிக்கை உரையின் போது, உள்நாட்டு பாதுகாப்புத் தொழிலை மேம்படுத்துவதற்காக நாட்டில் இரண்டு ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

சென்னை, ஓசூர், கோவை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களை தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ராணுவ தளவாடம் இணைக்கும். நாட்டின் முக்கிய பாதுகாப்புதுறை சார்ந்த உற்பத்தி மாநிலமாக தமிழகம் விளங்கும். இங்கு ஆட்டோமொபைல் கூறுகள் உற்பத்தி புகழ் பெற்றது. மிகவும் சக்திவாய்ந்த உற்பத்தித் தொழில் மாநிலமாகவும் வலுவான தொழில்நுட்ப துறை வளர்ச்சியையும் தமிழகம் கொண்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், மனிதவள மேம்பாட்டிற்கு இது பெரிய அளவில் உதவும்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய பாதுகாப்பு துறை உறுப்பினர்கள், பாதுகாப்பு பொதுத்துறை அதிகாரிகள், D.R.D.O (டி.ஆர்.டி.ஓ) மற்றும் தொழில் துறை உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close