இந்தியா

சீனாவை முந்தும் இந்தியா: லடாக்கில் உலகின் பிரம்மாண்ட சோலார் திட்டம் அமைக்க மோடி சர்க்கார் முடிவு: கார்கிலுக்கு கிழக்கே அமைகிறது!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உலகின் மிகப் பெரிய சோலார் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,00,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் தளங்களை அமைக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் 500 மெகாவாட் திறன் கொண்ட 25 சோலார் தளைங்களை  அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 12,750 டன் கார்பனை கட்டுப்படுத்தவும், டீசல் சார்ந்த ஜெனரேட்டர்களின் பயன்படாட்டை குறைக்கவும், கார்கிலுக்கு கிழக்கே 200 கி.மீ., தூரம் வரை சோலார் திட்டத்தை ஏற்படுத்த மத்திய  அரசு திட்டமிடப்பட்டுள்ளது. லடாக்கில் 5000 மெகாவாட் மின்திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க, சுமார் ₹45,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவடைய உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சீனாவில் உள்ள டெங்கர் பாலைவன சோலார் பூங்காவே உலகின் மிகப் பெரிய சோலார் மின்உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது. இதில் 1547 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லடாக் திட்டம் நிறைவுபெறும் போது இந்த திட்டமே உலகின் மிகப்பெரிய சோலார் மின் திட்டமாக இருக்கும். வருங்கால சந்ததிதியினரை பெட்ரோல் டீசல் மற்றும் நிலக்கரி மூலமாக உருவாகும் மாசுபாடுகளிலிருந்து முழுமையாக காப்பாற்றும் திட்டங்களை மோடி சர்க்கார் ஆர்வமுடன் செயலபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மோட்டார் வாகனங்களும் மின்மயமாக வாய்ப்புள்ளதால் எதிர்காலத்தில் பெட்ரோல் டீசல் செலவுகளிலிருந்து நமது நாடு மெல்ல, மெல்ல விடுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close