பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் கீழ்தரமான அரசியல் செய்து, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளனர். உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறது. அரசின் சாதனைகளை பா.ஜ.க தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் இல்லா ஆட்சியை தந்துள்ளது. அத்துடன் மோடி ஆட்சி காலத்தில் நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

மக்களின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து தாக்குதல் நடத்த மற்றும் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Share