இந்தியா

சுணக்க நிலை மாறியது: அந்நிய செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து திருப்திகரமாக உள்ளது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடந்த சில மாதங்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் ரூபாயின் மதிப்பை மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டு வரவும், டாலரில்லாமல் நேரடியாக இந்திய ரூபாய் மதிப்பில் சில நாடுகளுடன் வர்த்தகம் செய்தது உட்பட மத்திய அரசு சில வித நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த சில மாதங்களில் முதல் முறையாக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து 39,608.4 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் வெளிநாட்டு கரன்சி மதிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட வாரத்தில் கரன்சி மதிப்பு 221.5 கோடி டாலர் உயர்ந்து 37,029.2 கோடி டாலராக அதிகரித்துள்ளது. யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி மதிப்புகள் டாலரில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கையிருப்பு மதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெளிநாட்டு கரன்சி மதிப்பு 42,602.8 கோடி டாலராக உயர்ந்ததே அதிகபட்ச அளவாக இருந்தது. தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு 46.55 கோடி டாலர் உயர்ந்து 2,168.9 கோடி டாலராக உள்ளது உன ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2018 ஜூன் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் (ரிசர்வ் வங்கி ஜூலை – ஜூன் என நிதியாண்டை கணக்கிடுகிறது) 8.46 மெட்ரிக்டன் தங்கம் வாங்கியது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் 566.23 டன் தங்கம் உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close