செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது : 30 முன்பதிவு மையங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளாக ஜனவரி 11 முதல் 14 வரை நான்கு நாட்களுக்கு 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அது போல, பொங்கல் பண்டிகை முடிந்து திரும்பிவர வசதியாக ஜனவரி 17 முதல் 20 வரை பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பேருந்துகளும், பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு7,841 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெளியூர் பேருந்துகள் 5இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. அதாவது கோயம்பேடு பேருந்துநிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்துநிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்பட உள்ளன.

மேலும், பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட 4 இடங்களில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மட்டும் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து டிக்கெட்டுகளை www.tnstc.in, www.redbus.in,www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்-லைனிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சென்னையில் இருந்து வெளியூருகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் 1.37 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து இன்று முதல் இயக்கப்படுகின்றன.

Tags
Show More
Back to top button
Close
Close