சென்னையில் போகி பண்டிகையன்று டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார்.

அப்போது கல்லூரி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கையேடுகள்விளம்பரப் பலகைகள்அறிவிப்புகள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த ஷம்பு கல்லோலிகர் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Share