சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகம்மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்கம்தங்கும் விடுதி ஆகியவற்றை உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

2,000 கார்களை நிறுத்தும் அளவுக்கு வசதி கொண்ட ஆறு அடுக்கு வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதியாக இவையும் இடம்பெறும். பயணிகள் மட்டுமல்லாமல் பிறரும் இவற்றைப் பயன்படுத்தலாம். விமான நிலைய மெட்ரோ நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வணிக வளாகமும் திரையரங்கும் இடம் பெறவிருக்கின்றன. மேற்குப் பகுதியில் தங்கும் விடுதி அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடத்திலிருந்து விமான நிலையக் கட்டிடத்துக்குச் செல்ல பாலமும் கட்டப்படவிருக்கிறது. மொத்தம் ₹250 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் 2020 ஜூலையில் முடிவடையும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Share