செய்திகள்

அனைத்து சாதியிலும் ஏழைகள் உள்ளனர் : பொதுப் பிரிவு ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு நியாயமானது தான் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொந்த கருத்து

அனைத்து சாதியிலும் ஏழைகள் இருப்பதாகவும், ஏழைகள் நலனை கருத்தில் கொண்டு செய்யப்படும் இட ஒதுக்கீட்டால் சமுதாயத்துக்கு நன்மை ஏற்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு அளித்துநாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவளிக்கும் வகையில்இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தாம் சார்ந்திருக்கும் அதிமுகவின் கருத்து அல்ல என்றும்தனது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.

Inputs from Polimer

Tags
Show More
Back to top button
Close
Close