தமிழ் நாடு

தி.மு.க-வுக்கு மோடி அழைப்பு விடுக்கவில்லை: மு.க.ஸ்டாலினுக்கு Dr.தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

“பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க-வுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவில்லை என்றும் வாஜ்பாய் பாணியில் கூட்டணி என்பதை தி.மு.க-வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்?” என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் Dr.தமிழிசை சவுந்தரராஜன் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு பதில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் பொதுவான முறையில் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.க-வுடன் ஒருபோதும் தி.மு.க கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பற்றி தமிழக பாஜக தலைவர் Dr.தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், “கூட்டணிக்கு தி.மு.க-வை பிரதமர் மோடி அழைக்கவில்லை” என்றார். “தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று மோடி கூறியது தி.மு.க-வுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என்பதை தி.மு.க-வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்?” என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

Tags
Show More
Back to top button
Close
Close