செய்திகள்

காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை : பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கடந்த செவ்வாய்கிழமை  டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரையும் அடுத்தடுத்து சந்திக்க உள்ளார்.

பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்திரபாபு நாயுடு, மக்களவைத் தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார். தொகுதிப் பங்கீடு, கூட்டுப் பிரச்சாரம், பொது செயல் திட்டம்  போன்றவை குறித்து தலைவர்களுடன் அவர் விவாதிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியைத் தழுவும் என்றும் கூறினார். ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருவது குறித்தும் பதிலடி கொடுத்த நிதிஷ்குமார்,  இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்து விட்டது என்பதுடன், நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More
Back to top button
Close
Close