‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் பங்குதாரர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் தங்களது வருமானத்தை குறைத்துக் காட்டியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் வருமானவரித்துறை மறு ஆய்வு செய்தது. 2011-ம் ஆண்டு ₹155.41 கோடியும் 2012-ல் ₹154.96 கோடி யும் வருமானம் வந்ததாக வருமான வரித்துறை தெரிவித்தது. இதன் மூலம் ₹300 கோடி வரையிலான வருமானத்தை மறைத்து ₹68 லட்சம்  மட்டுமே வருமானம் வந்ததாக கணக்கு காட்டி சோனியாவும் ராகுலும் ₹100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

வருமானத்தை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியாவும் ராகுலும் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சோனியா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராகி, “பல விஷயங்களை வருமானவரித்துறை கவனத்தில் கொள்ளாமல் ₹141 கோடி வரை சோனியாவுக்கு வருமானம் வந்ததாக தவறாக கணக்கிட்டுள்ளது” என்றார். இதுதொடர்பாக சோனியா, ராகுல் மற்றும் வருமானவரித்துறை ஒருவாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வரும் 29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share