செய்திகள்

ஈரானுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : சர்வேதச உறவில் தனி இடம் பிடிக்கும் மோடி தலைமையிலான இந்தியா

ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் மூன்றாவது நாடாக ஈரான் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியாவுக்கு ஈரான் சுமார் 2 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

ஈரானுடன் எந்த நாடும் வர்த்தக தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அதற்கான மாற்று முறைகளை கண்டறிந்து  இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா உதவிகரமாக உள்ளது.

இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜாவத் ஸரிப் மூன்று நாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தார். டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்  சுஷ்மா சுவராஜை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் விவகாரம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தி பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close