இந்தியா

ரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் – பாகம் 2

கடந்த செவ்வாய் இரவு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தின் மீதான நேரடி கேள்விகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் உண்மைகளை அலசி பதிலளித்துள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியின் முதன்மை ஆசிரியர் அர்னாப் கோசுவாமி அவர்களுடன் ரபேல் தொடர்பான இறுதியான நேர்காணலில் பங்கேற்றார்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கிடையே,  தசால்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்த 36 ரபேல் ஜெட் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் குறித்து, அதன் மீது உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ள போதிலும், தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருப்பதாக குற்றம் சாட்டி வருவது  குறித்து நிர்மலா சீத்தாராமன் பின்வருமாறு பதிலளித்துள்ளார். அவை கேள்வி பதில் வடிவில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலின் மொழிபெயர்ப்பின் முதல் பாகத்தில் முதல் பத்து கேள்விகளும், பதிலும் பாகம் – 1 ஆக நேற்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த நேர்காணலின் இரண்டாம் பகுதி இதோ.

11) கடந்த அரசை குறிப்பிடுவதை விடுத்து, இனி இந்த ஒப்பந்தத்தின் மீதான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்வீர்களா?

நிச்சயமாக. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய அரசு எதையும் செய்யவில்லை.

12) ஏன் இந்த ஒப்பந்தம் புதிதான ஒரு ஏலத்திற்கு தயாராக இருக்க முடியவில்லை? போட்டிக்காக நல்ல சலுகையை யூரோ பைட்டர் கொடுக்கிறதெனில் நீங்கள் ஏன் அதை தேர்வு செய்யவில்லை? ஏன் ஏழாண்டுகள் பழமையான ஒரு தேர்வு தவிர்க்க முடியாததாக பார்க்கப்படுகிறது?

இந்த ஒப்பந்தத்தினை ஆரம்பித்த பத்து நாட்களில் ஐக்கிய கூட்டணி அரசு ரபேல் நிறுவனத்தை L1 என தீர்மானித்தது. அதன் பின் யூரோ பைட்டர் நிறுவனமான குறைவான விலையுடன் அணுகியது. குறைக்கப்பட்ட விலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அது சட்டத்திற்கு புறம்பானது.

L1-னினுடைய விலை என்ன என்பதை தெரிந்து கொண்டு பின், L1-னினுடைய விலையை தெரிந்து கொண்டோம், அதைவிட குறைவான விலைக்கு நாங்கள் உருவாக்கி தருகிறோம் என L2 சொல்வது நீதியாகுமா? நிச்சயமாக இல்லை. இது மென்மையான நடைமுறையை பாழாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி யுரோபைட்டர் நிறுவனம் ஐரோப்பியா முழுவதிலும் பரவியுள்ள தயாரிப்பாளர். நீங்கள் இரு அரசுக்குயிடையேயான ஒப்பந்தத்தை நோக்குகிறீர்கள் எனில் தசால்ட் பிரான்சில் உள்ளது (இது ஒன்று மட்டுமே பதிலள்ள என கூறி, மேலும் தொடர்கிறார்) விலையை தெரிந்து கொண்டு தொடர்ச்சியாக விலையை குறைப்பதாக அறிவிப்பவர்களை விட L1-ஆக தேர்வு செய்யப்பட்டவரிடம் அதிக நியாயம் இருக்கிறது.

13) இறுதி நேரத்தில் நீங்கள் ஆப்செட் நெறிமுறைகளில் திருத்தம் செய்தீர்களா?

எந்த நெறிமுறைகளை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? அதற்கான ஒப்பந்தம் 2016-இல் கையெழுத்திடப்பட்டது. மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளே அனுமதிக்கப்படலாம் என கூறும் ஆப்செட் நெறிமுறை 2013-யில் திருத்தப்பட்டது. அவை பல கொள்முதலுடன் தொடர்புடையது மேலும் ஒவ்வொன்றும் அதற்கான ஆப்செட்களை கொண்டுள்ளது. எனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனில் அது அனைத்து கொள்முதலையும் தான் பாதிக்கும்.

14) பிரான்சிடமிருந்து எந்த இறையாண்மை உத்திரவாதமும் இல்லையே ஏன்?

நீங்கள் சரியாக கேட்கிறீர்கள். குறிப்பிட்ட இந்த இறையாண்மை உத்திரவாதமும் அல்லது செளகரியத்திற்கான கடிதம் பிரான்ஸ் நாட்டின் பிரதமராலேயே கையெழுத்திடப்பட்டது. இந்த இரு அரசுக்குமிடையேயான ஒப்பந்தம் சட்டபூர்வமாக பிணைக்கப்பட்டது.

( நமக்கு ஆபத்து நேருமா?)

உங்களை பின்னிருந்து தாக்க யாரால் முடியும்? இது அரசுக்கும் மற்றொரு அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம். இறையாண்மை உத்திரவாதம் இன்றி மற்றொரு அரசாங்கத்திடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இது ஒன்றும் முதன் முறை அல்ல. இதை நாம் இரஷ்யாவுடன் செய்திருக்கிறோம். முலாயம் சிங் மற்றும் அட்டல் பிகாரி அவர்கள் இறையாண்மை உத்திரவாதமின்றி இது போன்ற கொள்முதலை செய்திருக்கிறார்கள்.

15) நீங்கள் ஏன் கூட்டு பாராளுமன்ற குழுவை ஏற்றுக்கொள்வதில்லை?

இதிலிருக்கும் முதல் பிரச்சனை உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆராய்ந்துள்ளது. நீதிபேராணைக்கு முன்பிருந்த பிரச்சனை என்ன என்பது  நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விலை, செயல்முறை மற்றும் பங்குதாரர் மதிப்பீடு அனைத்தும் தேவையாய் உள்ளது. இதை நீதிமன்ற முழுமையாக ஆராய்ந்து, இதில் சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை என்பதை  ஒவ்வொன்றி மீதும் கூறியுள்ளது – இதை நான் பாராளுமன்றத்திலேயே வாசித்திருக்கிறேன்.

மற்ற நேரங்களில், அகஸ்டா வெஸ்ட்லாண்டில் இருப்பதை போல ஊடகங்கள் சில ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது எனும் நோக்கில் சில கணிசமான ஆதாரங்களுடன் முன் வருகிறார்கள். இந்த முறை ஜெட்லி அவர்கள் இதற்கு பதிலளித்துள்ளார், மற்றும் பரிக்கார் அவர்கள் பதிலளித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு விமானத்தை கூட வாங்காமல், இந்திய விமான படையை வரட்சியானதாக விட்டு சென்று இந்த போலியான பிரச்சாரத்தை துவக்கியதற்காக (ராகுல் காந்தி) அவர்களுக்க்கு தான் தூக்கமற்ற இரவுகள் இருக்கக் கூடும்.

காங்கிரஸின் தலைவர் வீரப்ப மொய்லி அவர்கள் இந்திய விமான படையின் தளபதியை பொய் உரைப்பவர் என்கிறார். ரபேல் ஒரு நல்ல போர் விமானம் என்று கூறியதற்காக இந்தியாவில் இருக்கும் யாரேனும் ஒரு விமான தளபதியை இவ்வாறு அவமதிப்பார்களா? அவர்கள் அனைவரையும் பொய் உரைப்பவர்கள் என அழைக்கிறார்கள். அவர்கள இந்திய விமான படையின் பெருமையை தாழ்த்தி, சிதைவை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

16) (நடுத்தர வர்கம் தொடர்பான பின்புலத்தின் காரணமாய்) உங்களுக்கும் ராகுல் காந்திக்கும் இருக்கும் விவாதம் குறித்து?

அங்கு எழுந்து நின்று நடுத்தர குடும்பத்திலிருந்து நான் வந்திருப்பதாய் கூறினேன். கந்தான் உடன் இருப்பவர்கள் யாரும் என்னை பின்னாலிருந்து ஜூட்டி மற்றும் சோர் என அழைக்க தேவையில்லை. காங்கிரஸ் ஆட்கள், காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த எனது மாமனரை தோண்டி எடுத்துவிட்டனர். எனது திருமண நேத்தில் அவர் இறந்துவிட்டார். எனக்கு அவரை நேரில் சந்திக்கும் நற்தருணம் கூட வாய்க்கவில்லை. நான் எனது மாமியாரை குறித்து எப்போதும் உயர்வாகவே கருதியுள்ளேன். காரணம் நான் அரசியலில் பிரவேசித்த ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தவர் அவர். ஆனால் காங்கிரஸ் கட்சி அதனுடைய பின்புலத்தை கொஞ்சம் சிந்தித்து பார்கட்டும். அரசியலில் இருப்பதற்காக தன் சொந்த பண்த்தை செலவழிக்கும் குடும்பம். C.P.I யில் அச்சமயத்தில் சுதந்திர போராட்ட வீரர்களாய் இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராகவே கண்டவுடன் சுடும் ஆணையை பிறப்பித்தவர்கள். நேரு கேட்டுகொண்டதன் பின்னரே முக்கிய போக்கில் இணைந்தவர்கள். அவர்கள் மிக சாதரணமான நடுத்தர குடும்ப வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிமாச்சல் பிரதேசத்தில் இலண்டனில், சொத்துக்களே இல்லை, மற்றும் அவர்களின் தாமாத்ஜிக்கள் மிகச்செழிப்பாக வாழவே இல்லை.

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் என சொல்வதால் எந்த நலனையும் பெறப்போவதில்லை.

பல பொய் பிரச்சாரங்கள் திணிக்கப்படாமல் இருப்பினும் ரபேல் தற்போது மக்களின் மனதில் உள்ளதற்கு காரணம், இப்போது அனைத்து உண்மைகளும் அவர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

ரிபப்லிக் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட முழு நேர்காணலை இங்கே காணலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close