இந்தியா

கறுப்பு பண தடுப்பு சட்டம் மூலம் ₹6,000 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் கண்டுபிடிப்பு

2015 ஆம் ஆண்டில் மோடி அரசால் இயற்றப்பட்ட வெளிநாட்டு கறுப்புச் சட்டத்தின் கீழ் ₹6,000 கோடி மொத்தம் அறிவிக்கப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், அக்டோபர் 31, 2018 வரை, வெளிநாட்டு கறுப்பு பணச் சட்டத்தின் கீழ் 34 வழக்குகள் புகார் செய்யப்பட்டுள்ளன.

“கறுப்பு பணம் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக ₹6,000 கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிக்கிப்படாத வெளிநாட்டு சொத்துக்களை கண்டறிந்துள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30, 2015 அன்று வரை இருந்த இந்த உடன்பாட்டின் படி ₹4,100 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய 648 பிரதிகள் சமர்பிக்கப்பட்டன. இதன் மூலம் வரி மற்றும் தண்டனையால் ₹2,470 கோடிக்கு மேல் வசூலிக்கிப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சிவ் பிரசாத் சுக்லா மேலும் கூறுகையில் “வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருவாயை அறிவிக்காத நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். விசாரணை, வருமானம் மதிப்பீடு, வரி விதிப்பு, அபராதங்கள் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது ஆகியவை இதில் அடங்கும்”, என்று தெரிவித்துள்ளார்.

Picture Courtesy : The Hindu Business Line

Tags
Show More
Back to top button
Close
Close