செய்திகள்

விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பைக்குகள் எரிந்து நாசம்: விஷமிகள் குறித்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிகோட்டையில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கல்குவாரி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் ரங்கநாத்விஸ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட துணை தலைவராகவும் உள்ளார். இவர் தேன்கனிகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டு வாசலில் தீப்பிடித்து புகை எழுந்ததையடுத்து வெளியில் வந்து பார்த்த அவரும் அவரது குடும்பத்தினரும்வீட்டின் முன்பகுதியும், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒருசைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனது வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக ரங்கநாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரங்கநாத் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பணிகளை சிறந்த முறையில் ஆற்றி வந்தார். இந்த நிலையில் அவர் மீது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதேன், விஷமிகள் யார் என்பது குறித்து மர்மமாக உள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்

Tags
Show More
Back to top button
Close
Close