டி.பி எனப்படும் காச நோயின் பாதிப்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கணிசமான அளவில் காணப்படுகிறது. காச நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காக்கும் பொருட்டு மோடி அரசு கொண்டு வந்த திட்டம் தான் நிக்ஷய் போஷன் யோஜனா (NPY). இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் நோயாளிகளின் வங்கி கணக்கிலோ அல்லது அவர்களின் இரத்த உறவுகளின் வங்கி கணக்கிலோ அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இது வரை இந்தியாவில் 8 லட்சத்திற்கும் மேல் காசநோய் நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

நிக்ஷய் போஷன் யோஜனா (NPY) கீழ் பதிவு செய்யப்பட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான காசநோய் நோயாளிகள் நேரடியாக வங்கி கணக்கில் பணம் அளிக்கும் (Direct Benefit Transfer) திட்டத்தின் கீழ் நலன் பெற்றுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

ஜனவரி 1 ஆம் தேதி கணக்கின் படி 20.94 லட்சம் தகுதி வாய்ந்த பயனாளிகளில், 8.78 லட்சம் (42%) பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். வங்கி கணக்கில் நேரடி பண பரிவர்த்தனை (D.B.T) எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதல்களை அமைச்சகம் வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“பொது நிதி மேலாண்மை அமைப்பு (P.F.M.S) அல்லது நிக்ச்ஷா PFMS பேமண்ட் இன்டெர்பேஸ் மூலமாக நேரடியாக பணம் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நோயாளிகளின் இரத்த உறவினரின் வங்கிக் கணக்கின் மூலம் மருத்துவ செலவுக்கு ஆகும் பணத்தை வழங்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் காச நோய் நோயாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா (P.M.J.D.Y) மற்றும் இந்திய தபால் வங்கியில், பூஜ்ஜிய இருப்பு வங்கி கணக்குகளை திறக்க உதவுவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Student of Vedanta & Yoga. Writes Java code in office and in free time, writes about Socio-Religious & Politics. Tweets at @PraneshRangan

Share