செய்திகள்

வல்லரசு நாடுகளுடன் வலுப்படும் இந்தியாவின் உறவு – இணக்கப்பாட்டிற்கு வித்திட்ட பிரதமர் மோடி.

அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப் இந்தியா குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையான கருத்தை கூறியதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.இரு தலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இந்தியா – அமெரிக்கா நாடுகளின் நல்லுறவு கடந்த ஆண்டில் திருப்திகரமாக அமைந்திருந்ததை சுட்டிக்காட்டிய அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் முத்தரப்பு மாநாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு துணை புரிந்தது. இதன் எதிரொலியாக பாதுகாப்புத்துறை, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் சாதகமான கூட்டுறவு நிலவியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இதேபோல் இந்த ஆண்டிலும் நட்புறவுடன் இணைந்திருந்து பணியாற்ற டிரம்ப்பும், மோடியும் விருப்பம் தெரிவித்தனர். இந்த ஆலோசனையின்போது பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பாகவும் தங்களது கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Tags
Show More
Back to top button
Close
Close