பாரத பிரதமர் மோடி அவர்கள் வீடியோ நேர்காணல் மூலம்  நாளை ஜனவரி 10 ந்தேதி மதியம் 12.30 மணியளவில் அரக்கோணம்,கடலூர், தர்மபுரி,ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்ட பூத் பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறார். அவருடன் கலந்து உரையாட வருமாறு பொறுப்பாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அகில இந்திய அளவில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன. பிரதமர் மோடி நாடு முழுவதுமுள்ள அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளின் பூத் பொறுப்பாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரம் பற்றி கேட்டு தேர்தல் பணிக்கு தயார் படுத்தி வருகின்றார். அவர்களை உற்சாகப்படுத்தி பேசி வருகிறார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் மனம்விட்டு பேசி வருகின்றனர்.

Advertisement

“என்னுடைய வாக்குச் சாவடி ..வலிமையான வாக்குச் சாவடி ” என்கிற இந்த வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் ஏற்கனவே கோவை, சென்னை, காஞ்சிபுரம் உட்பட 15  நாடாளுமன்ற தொகுதிகளிலுள்ள பூத்கமிட்டி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்ற மாதம் நடைபெற்றது. பிரதமருடனான இந்த நேரடி சந்திப்பு தமிழக பாஜகவினரிடையே குறிப்பாக வாக்குச் சாவடி அளவிலான தொண்டர்களை ஊக்குவித்து மகிழ்வித்தது. இந்த நிலையில் நாளை மாலை 4.30 மணி அளவில் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த பூத் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

Share