செய்திகள்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் மோடி தலைமையிலான இந்தியா : உலக வங்கி அறிக்கை

இந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வரும் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஜி.டி.பி 7.5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்ததாகவும், தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை எட்டி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனா 2019-20ம் நிதியாண்டில், 6.2 சதவீதம் அளவுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். 2021ல் இது மேலும் குறைந்து 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், சீனாவின் ஜி.டி.பி 6.5 சதவீதமாக இருக்கும்.

மேலும் தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும். தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடப்படும்படியாக இடத்தை எட்டி உள்ளது. ஜி.எஸ்.டி அமல் தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளது. வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி போன்ற  கட்டமைப்பு சீர்திருத்தங்களால் உள்நாட்டு தேவை வலுவானதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஒவ்வொரு வருடமும் இந்தியா வளர்ச்சி ஆற்றல் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்  அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Tags
Show More
Back to top button
Close
Close