இந்தியா

தவறான செய்திகள் பரப்புவதை தடுக்க சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: ராணுவ தளபதி பிபின் ராவத்

பிரிவினைவாதத்தை பரப்ப, சமூக வலைதளங்களை விஷமிகள் பயன்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், பிரிவினைவாதத்தை பரப்புவதற்கு முக்கிய தளமாக பயன்படுவதால், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும். தவறான தகவல், இல்லாத ஒன்றை திரித்து கூறுதல், மதம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதால், இந்தியாவிலும், குறிப்பாக காஷ்மீர் மாநிலத்திலும் பல வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், தான், படித்த இளைஞர்கள் அதிகம் பேர் பயங்கரவாத அமைப்பில் இணைகின்றனர். பயங்கரவாதத்தை தனது கொள்கையாக வைத்திருக்கும் நாடு இருக்கும் வரை, இங்கு பயங்கரவாதம் இருக்க தான் செய்யும்.

Tags
Show More
Back to top button
Close
Close