சிறப்பு கட்டுரைகள்

ரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் – பாகம் 1

கடந்த செவ்வாய் இரவு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தின் மீதான நேரடி கேள்விகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் உண்மைகளை அலசி பதிலளித்துள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியின் முதன்மை ஆசிரியர் அர்னாப் கோசுவாமி அவர்களுடன் ரபேல் தொடர்பான இறுதியான நேர்காணலில் பங்கேற்றார்.

இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கிடையே,  தசால்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்த 36 ரபேல் ஜெட் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் குறித்து, அதன் மீது உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ள போதிலும், தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட விதத்தில் குளறுபடிகள் இருப்பதாக குற்றம் சாட்டி வருவது  குறித்து நிர்மலா சீத்தாராமன் பின்வருமாறு பதிலளித்துள்ளார். அவை கேள்வி பதில் வடிவில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1) ரபேலினுடைய விலை விபரங்களை கொடுக்கையில் நீங்கள் எந்த மாறுதலையாவது செய்தீர்களா?

எந்த மாறுதல்களும் இல்லை. விமானத்தின் அடிப்படை விலை பாராளுமன்றத்தில் மூன்று முறை தெரிவிக்கப்பட்டது. இரகசிய விதியின் மீது வாக்களித்த போது நான் சொன்னது என்னவென்றால், நீங்கள் அடிப்படை விலைக்கு மேலும் அதற்கு அப்பாற்பட்டும் பல விபரங்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். அங்கு தான் இரகசிய விதி வரம்பு மீறப்படுவதாக தெரிகிறது. (இரகசிய விதியை குறிப்பிட்டு) இது எனக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்த முன்னவரான ஏ.கே. ஆண்டனி அவர்களால் கையொப்பமிடப்பட்டது. நான் என் வார்த்தையை காத்துள்ளேன். கொடுக்கப்பட்ட விலை அடிப்படை விமானத்திற்கானது.

2) உங்களுக்கு மலிவான ஒப்பந்தம் கிடைக்கப்பட்டிருந்தும் நீங்கள் ஏன் இன்னும் அதிகமான விமானங்களை செய்து தர சொல்லவில்லை?

மொத்தம் பறக்கும் நிலையில் இருக்கும் 18 போர் விமானங்களை பெறுவதும், மீதத்தை உற்பத்தி செய்வதும் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தமின்றி செய்யவிருந்தது. ஒரு வேளை ஹெச்.ஏ.எல் மற்றும் டசால்ட்டின் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் அவர்கள் மீதமிருக்கும் 108 போர்விமானங்களை இந்தியாவில் தயாரித்திருப்பார்கள். ஆனால் நாங்கள் 18 பறக்கும் நிலையில் இருக்கும் விமானம் என்பதை மேலும் மேன்மைப்படுத்தி நாங்கள் அதை இரட்டிப்பாக பெற்றிருக்கிறோம்.

இந்திய விமான படைக்கு வெறும் 126 போர் விமானங்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. அதற்கு பலதரப்பட்ட ரகத்தில் 500 – 600 விமானங்கள் வரை தேவையுள்ளது. (M.M.R.C.A உட்பட) எனவே 126 என்பது மட்டுமே அதிகபட்சமல்ல. நீங்கள் நினைப்பது போல போர் விமானங்களை ஒரு கடைக்கு சென்று ஒரு அடுக்கிலிருந்து எடுத்துக்கொண்டு வந்துவிட முடியாது. நாம் வேண்டும் என்ற கோரிக்கையை சொன்ன அடுத்த நிமிடம் அவர்கள் உங்களுக்கான உற்பத்தியை தொடங்குகிறார்கள். எனவே விரைவாக கிடைக்க கூடியது மற்றும் அதிக எண்ணிக்கையில் கிடைக்க கூடியது 36 விமானங்கள்  தான். அதுமட்டுமின்றி அவசரகாலங்களில் இந்திய விமான படையில் விமானங்களின் தேவை எப்போதும் 36 ஆகத்தான் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை நாம் கையெழுத்திட்டு மூன்றாண்டுகளில் நாம் முதல் போர் விமானத்தை பெற்றிருக்கிறோம்.

3) பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC) 126 ஜெட் விமானங்ளுக்கான கொள்முதல் தேவையை தெளிவுப்படுத்திய போது, ஏன் அது மாற்றியமைக்கப்பட்டது?

மாற்றம் நடந்ததற்கான ஒரே காரணம் பறக்கும் நிலையிலான விமானத்தை கணக்கில் கொண்டது தான். மற்றும் நாங்கள் 18 என இருந்த போர் விமான எண்ணிக்கையை 36 ஆக மாற்றியமைத்தோம். அதிலும் 2 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியே செல்லவும், நாங்கள் உள்ளே வரவுமென கடந்துவிட்டது.

4)  நீங்கள் 126 போர் விமானங்கள் என்பதனை தொடர்வீர்களா?நிச்சயமாக, நாங்கள் முன்னரே R.F.I -ஐ கொண்டுவந்துள்ளோம். உற்பத்தியாளர்கள் அவர்களின் பங்குதாரர்களுடன் உற்பத்தி செய்ய முன் வர வேண்டும்.

5) நடப்பு ஒப்பந்தத்தில் உள்கட்டமைப்பு மாற்றம் ஏதும் உள்ளதா?

நான் அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது. ஆனால் நாங்கள் சிறப்பான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளோம். தேவைப்படும் அனைத்து நடைமுறைகளும், தொழில்நுட்பம், விலைக்கான பேச்சுவார்த்தை, மற்றும் இதர கமிட்டிகள் தொடர்பாக கிட்டதட்ட 74 முறை கூடி விவாதித்துள்ளனர். அனைத்தும் மிகச்சிறப்பான தொழில் முறையிலேயே செய்யப்பட்டுள்ளது.

6) அரசு எந்த வகையிலேனும் அனில் அம்பானியின் ரிலையன்ஸை இந்திய பங்குதாரராக (ஆப்செட் பங்குதாரர்) முன்மொழிந்ததா? ஏன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலந்தே அப்படி குறிப்பிட்டார்?

நாங்கள் அதை முன்மொழியவில்லை (ரிலையன்ஸை இந்திய பங்குதாரராக). மக்களிடம் இட்டுகட்டி சர்ச்சையை கிளப்பும் விவாதத்தில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் பங்குதாரர்  இருந்ததெல்லாம் ஏன் செய்தி தாளில் இல்லையா?

“நான் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசினேன். அவர் சொன்னார். “அது இது என பலதையும்” சிலர் சொல்வார்கள்.  நான் ஊடகங்களிடம் கோருவது, நீங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரை அழைத்து அமர செய்து அவரை சொல்ல சொல்லுங்கள், அவர் எப்போது முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் சந்தித்தார். அவர்களின் பேச்சு எது சார்ந்ததாக இருந்தது? அது அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையாகவும் அந்த சந்திப்பின் நிமிடத் தொகுப்பும் உள்ளதா?

7) காங்கிரஸ் யூரோ பைட்டர் விமானத்திற்காக ஆதரவளிப்பதாய் நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

இதை நீங்கள் காங்கிரஸ் தலைவரிடம் கேட்பது சரியானதாய் இருக்கும். இன்று அவர் (கிரிஸ்டியன் மைக்கேல்) சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்தித்து கொண்டிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதற்கு அவரிடம் பதிவுகள் இருப்பதாகவும் மற்றும் ரபேலின் போட்டியாளரை அவர் அவ்வப்போது கவனித்து கொள்வதாகவும் ஊடகங்கள் சொல்லி வருகிறது. எனவே தொடர்பு இருக்கிறதா என்பது கேட்கப்பட வேண்டாமா?  எனில் அரசாங்கத்தின் பங்கு தான் என்ன? மேலும் தான் கார்பரேட்களாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும், ஏதோவொரு கார்பரேட் எதிரிகளாலும் தான் பயன்படுத்தப்படுகிறோம் என்பது தெரியாமலேயே காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என என்னி நான் கவலைப்படுகிறேன். ஏன் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்ற கேள்விக்கு எப்படி உங்களால் தொடர்ந்து பதிலளிக்க முடியாமல் இருக்கிறது.

ஆனால் நான் இங்கு பல சபைகளில் பாராளுமன்றம் உட்பட பல இடங்களில் பதிலளித்து வருகிறேன். அவர்கள் சாட்சிகளை கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறேன்.

8)  முன்னாள் ஹெச்.ஏ.எல் லின் தலைவர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதும், ஏன் ரபேல் ஒப்பந்தத்திற்கு ஹெச்.ஏ.எல் தேர்வு செய்யப்படவில்லை?

நாம் எத்தனை விமானத்தை பெறுகிறோம்? 36 அல்லவா. காங்கிரஸ் ஆட்சியிலும் 18 விமானத்தை தான் பிரான்சிடமிருந்து பெறயிருந்தார்கள். இவைகளுக்கு இந்தியாவில் கட்டமைப்பு இல்லை. நாங்களோ அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ மீதம் உற்பத்தி செய்யயிருக்கும் 108 பற்றி தான் பேசிவருகிறோம் எனில் இங்கே ஹெச்.ஏ.எல் பற்றிய கேள்வி எங்கிருந்து வந்தது?

முன்னாள் ஹெச்.ஏ.எல் தலைவரின் நேர்காணல் சமீபத்தில் வந்த ஒன்றல்ல. “95% பேச்சுவார்த்தை முடிந்துவிட்து “என கூரிய டஎரிக் ட்ராப்பியரின் (தசால்ட்டின் தலைமை நிர்வாகி) நேர்காணல் 2015 யில் வெளியானது. ஹெச்.ஏ.எல் யின் தலைவர் அதற்கு ஒரு வார்த்தையையெனும் உச்சரித்தாரா?

9) அனில் அம்பானி குறித்த கேள்வி – இந்த ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது திணிக்கப்படுகிறதா? (ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸை மேற்கொள்காட்டி செய்யப்பட்ட 2012 ஏற்பாடுகள்)?

என்னிடம் டசால்ட்டின் மனதில் என்ன இருந்தது என்பது குறித்து எந்த கருத்தும் இல்லை.

10) இந்திய பங்குதாரர் (ஆப்சட்) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது அனில் அம்பானியின் நிறுவனம் புதிதாக இணைத்து கொள்ளப்பட்டதா?

ஊடகங்களில் பல பதிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. டசால்ட் யாரை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம். அதை அவர்கள் செய்யும் வரை எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. போர்விமான தயாரிப்பாளர்களுக்கான கால அளவை விதிகள் அனுமதிக்கின்றன.

கொள்கையின் படி, ஆப்செட் தேர்விற்கு அவர்களுக்கு இன்னமும் நேரம் உண்டு. அவர்கள் வந்து என்னிடம் சொல்லட்டும். இது இரு அரசாங்கத்துக்கிடையேயான ஒப்பந்தம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இதில் தொடர்பு கொண்டுள்ளது மற்றும் தசால்ட் என்கிற வணிக நிறுவனம் இந்த அரசாங்கத்திற்க்கிடையேயான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அரசாங்க ஒப்பந்தத்தின் உரிமை நடப்பு அரசிடமே இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியினுடையது ஒப்பந்தமற்றது. எனவே நீங்கள் காங்கிரஸின் விவரணைக்குள் செல்லவேண்டாம் என நினைக்கிறேன். அவர்கள் ஒரு போர் விமானத்தை கூட வாங்க வில்லை’ என்று கூறியுள்ளார்.

ரிபப்லிக் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட முழு நேர்காணலை இங்கே காணலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close