செய்திகள்

ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராஸாக்களில் பாடம் படிப்பது ஆகியவை குற்றம் : கம்யூனிஸ்ட் நாடான சீனா புது சட்டம்

சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று அந்த நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக விகடன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. புதிய சட்டத்தின்படி ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராஸாக்களில் பாடம் படிப்பது ஆகியவை குற்றமாக கருதப்படும் என்றும் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 8 இஸ்லாமிய சங்கப் பிரதிநிதிகளுடன் சீன அரசு அதிகாரிகள் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன்படி,  ஜின் ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன இஸ்லாம் மக்களைப் படிப்படியாக சீன கலாசாரத்துக்கு மாறிக்கொள்ள பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குளோபல் டைம்ஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கம்யூனிச நாடான இங்கு இஸ்லாமிய மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய 10 லட்சம் பேர் அரசு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதாகவும் சொல்லப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பது, தொழுகையில் ஈடுபடுவது, ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது போன்றவை சீனாவில் தண்டனைக்குரிய குற்றம். ஜின் பிங் இரண்டாவது முறையாகச் சீனா அதிபராகப் பதவியேற்ற பிறகு  சீனமயமாக்கல் திட்டத்தை அமல்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிற இன மக்களையும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சீன நாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக செய்தி குறிப்புகள் கூறுகின்றன.

Picture Courtesy : Global Times

Tags
Show More
Back to top button
Close
Close