இந்தியா

செய்த மோசடியை மூடி மறைக்க தேர்தல் பகடை காயாக அகிலேஷ் யாதவ்..!

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் விதிகளை மீறி ஒரே நாளில் 13 சுரங்கங்களை குத்தகைக்கு விட்டதாக சிபிஐ அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், கனிமவளத்துறை அமைச்சராகவும் இருந்த அகிலேஷ் யாதவ், 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி ஒரே நாளில் 13 சுரங்கங்களைக் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளதா சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.  இது 2012-ம் ஆண்டு ஆன்லைன் டெண்டர் கொள்கைப்படி சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் செய்த குற்றங்களை வெளிகொண்டுவர மத்திய அரசு முயற்சித்து கொண்டிருக்கும் வேளையில், மக்களவைத் தேர்தலுக்காக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி-மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேர முன்வந்தால் அந்தக் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று 2 கட்சிகளும் அறிவித்துள்ளன. உ.பியில் பாஜகவை வீழ்த்துவதே 2 கட்சிகளின் முக்கிய நோக்கம் என்றும் அவை அறிவித்துள்ளன. இதன் மூலம் அகிலேஷ் கூட்டணி, தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைக்க தேர்தலை வைத்து மிகப்பெரிய அளவிலான சதி திட்டம் தீட்டி வருவதாக பாஜக தரப்பு  தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close