தமிழ் நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி – பசுமை தீர்ப்பாய உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு!

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்களை தூண்டிவிட்டு சில குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த முறையீட்டை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், ஐகோர்ட் கிளை உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதனை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவையும் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது வழி ஏற்பட்டுத்தியுள்ளது. என்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தமிழக அரசின் அடுத்த கட்டவடிக்கையை பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close