இந்தியா

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் : ஆர்.டி.ஐ தகவல்

மோடி அரசுக்கு எதிரான விரோத சிந்தனைகளை  சிறுபான்மை மக்களிடையே எதிர்கட்சிகளும், சில மத அமைப்புகளும் தொடர்ந்து கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர்களின் முகத்தில் கரி பூசுவதுபோல கீழ்கண்ட ஆர்.டி.ஐ தகவல்களை ஆங்கில பத்திரிகையான MyNation தற்போது வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஆட்சியுடன்  2004 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை வரை இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் ஐக்கிய முன்னணி ஆட்சியையையும் ஒப்பிட்டு எந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறித்து நொய்டாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் குப்தா உள்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல தகவல்களை பெற்றுள்ளார். அந்த தகவல்களை மை நேஷன் என்கிற ஆங்கிலப் பத்திரிகை பகிர்ந்துள்ளது .

அதன்படி 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 10,399 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 30,723 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 1,605 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவற்றில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியின் முதல் ஆட்சியின் போது மட்டும் (2004 மற்றும் 2008 ஆண்டுகளில்) 3,858 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

இதே காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முன்னணியின் 2 வது கட்ட ஆட்சியின்போது (2009 மற்றும் 2013) 3,621 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் மோடி சர்க்காரின் 2014 முதல்  2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற வன்முறை சம்பவங்கள்  2,920  மட்டும்தான் .

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த சமயத்தில் மதவாத வன்முறை சம்பவங்கள் முதல் மூன்று ஆண்டுகளில் மிக அதிக அளவில் இருந்தன.

2008 ஆம் ஆண்டில் அதிகபட்சம் 943 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் 849 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2013 ல், 823 மதவாத கலவரங்கள் நடந்தன. அப்போது நடைபெற்ற சம்பவங்களை மோடி சர்க்கார் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களோடு ஒப்பிடுகையில் மோடி சர்க்கார் ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் குறைவானவை. 2004-2014 காலப்பகுதியில் நடைபெற்ற இனவாத வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்ட மக்களின் சராசரி எண்ணிக்கைக்கையை கணக்கிடும்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு சந்தேகத்திற்குரிய வேறுபாட்டை சம்பாதிக்கின்றது.

2004 மற்றும் 2013 க்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் 1,216 பேர் கொல்லப்பட்டனர். அந்த எண்ணிக்கை மோடி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு சராசரியாக 97  ஆக வீழ்ச்சி அடைந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த சமயத்தில் ஒரே ஆண்டில் வகுப்புவாத ஊடுருவல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசாங்க தகவல்களின்படி, 2008 ல் 167 பேர் கொல்லப்பட்டனர், இது மிக உயர்ந்ததாகும், 2004 ல் 134 மற்றும் 2013 இல் 133 பேர் கொல்லப்பட்டனர். 2014 க்குப் பிறகு, வகுப்புவாத கலவரங்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்பதை இந்த தகவல்கள் மூலம் அறியலாம்.

RTI information as sourced from MyNation
RTI Information as sourced from MyNation

நொய்டாவில் தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் குப்தா 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற வகுப்புவாத கலவரங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் இந்த தகவல்கள் பெறப்பட்டன. இது சம்பந்தமான தகவல்கள் மாநில அரசாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close