ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து அசோக் கெலாட் முதல் அமைச்சரானார்.  சச்சின் பைலட் துணை முதல் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே பற்றி காங்கிரஸ் கட்சியின் எல்.எல்.ஏ. ராம்லால் மீனா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வெளிவந்து வைரலாகி உள்ளது. அவர் பிரதாப்கார் மாவட்டத்தின் விராவலி நகரில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்பொழுது,முதல்வர் அசோக் கெலாட்டின் பணிகளை பாராட்டுகிறேன்.
முதல் அமைச்சராக பதவியேற்றதில் இருந்து அவர் தனது வேலைகளை தொடங்கி விட்டார்.ஆனால் (வசுந்தரா) ராஜே, மதுபான புட்டிகளை திறப்பதில் தொடர்ந்து பிசியாக இருக்கிறார்.  வேலை செய்வது என்பது இல்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். தொடர்ந்து அவர், முதல்வராக இருந்த காலத்திலும் மதுபான புட்டிகளை திறப்பதிலேயே பிசியாக இருந்து வந்தவர் ராஜே.  இதனால் வளர்ச்சி பணிகள் பாதிப்படைந்தன என கூறினார்.  இது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது.
Share