இந்தியா

இந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன்தானாம்! கூகுள் தேடுதலில் காட்டப்படும் தகவலால் சர்ச்சை!!

சமீபத்தில் கூகுளில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படமும், டாப் 10 கிரிமினல்கள் என தேடினால் தாவூத் இப்ராஹிம், கடாபி ஆகியோர் உட்பட சிலரை காட்டியது. அடுத்தடுத்த இது போன்ற நிகழ்வுகளால், முக்கிய தலைவர்களை வேண்டுமென்றே கலாய்ப்பதாக கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது மோசமான முதல்வர் என தேடினால் பினராயி விஜயனின் படம் காட்டப்படுகிறது. சபரிமலை விவகாத்தில் கடும் எதிர்ப்புக்கள், போராட்டங்களையும் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.

சபரிமலை விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் என கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பலரின் அதிருப்திக்கு பினராயி விஜயன் ஆளாகி உள்ளார். இந்நிலையில் கூகுளின் இந்த செயல் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர்குலைப்பதற்காக இவ்வாறு நடந்துள்ளதாகவும் கேரள அரசு குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துவதால், கோபம் அடைந்த கேரள நெட்டிசன்களின் செயல்தான் இது எனவும் கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close