தமிழ் நாடு

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிப்பு : கல்வராயன் மலை பகுதி மக்களின் நீண்ட கால கனவு பலித்தது!

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்து அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், சங்கராபுரம், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் கனவு நீண்ட காலத்துக்குப் பின் பலித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆகியுள்ளது.

தற்போதுள்ள விழுப்புரம் மாவட்டம் ஏற்கனவே கடலூர் மாவட்டமாக இருந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளிலிருந்து கடலூர் சென்று வர வெகு தொலைவாக இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மக்கள் 23 ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை விடுத்தனர். ஆனால் விழுப்புரம் மாவட்டம் கடலூரிலிருந்து பிரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக் குறிச்சி பகுதிகள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் மீண்டும் கோரிக்கை விடப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இது குறித்து பரிசீலித்து வந்தார். தற்போது விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கல்வராயன் மலைப்பகுதிமக்களின் கனவு நீண்ட காலத்துக்குப் பின் பலித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக ஆகியுள்ளது. 

Tags
Show More
Back to top button
Close
Close