கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்திற்கு இரண்டு கம்யூனிஸ்ட் பெண்கள் சென்றுள்ளனர். அவர்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாகச் சென்றதாக தகவல் வெளியாயின. நள்ளிரவில் புறப்பட்டு விடியும் முன்பே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சன்னிதானத்திற்கு சென்ற பெண்களுக்கு கேரள பினராயி அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியானது. இதனை தொடர்ந்து கேரளாவில் சபரிமலை போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் உள்ள எருமலயில் உள்ள வாவர் மசூதிக்கு இந்து மக்கள் கட்சியை சேர்ந்த வீர தமிழ் பெண்கள் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழிசம்பாரா காவல்துறை அதிகாரிகள் இரண்டு பெண்களையும் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற மூன்று ஆண்களையும் கைது செய்துள்ளதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, பினராயி தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசின் மதவாதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்.

Share