கடந்த 4 வருடங்களில் நாடு வளர்ச்சியடையவில்லை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் தாண்டவமாடுகிறது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முற்படுகிறது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள். ஆனால் புள்ளி விவரங்கள் உண்மையை தெளிவுப்படுத்துகிறது. உலகிலேயே மிக வேகமாக வளரும் மிக பெரிய நாடுகளில் இந்தியா முதலிடம், கடந்த 14 மாதங்களில் 79.16 லட்ச வேலைவாய்ப்புகள், பணவீக்கம் 4% என்று மிக ஸ்திரமான பாதையில் இந்தியா செல்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை மிக மந்தமாக செயல்பட்டது என்பது நாடறிந்தது. ஆனால் மோடி அரசில் பாதுகாப்புத்துறை பல ஆக்கபூர்வமான செயல்களை செய்து கொண்டிருக்கிறது. கடந்த 3 வருடங்களில் 1.73 லட்ச கோடி மதிப்பிலான 111 ராணுவ திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தினால் வேலைவாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். 65,471.28 கோடி மதிப்பிலான 99 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்டது.

Advertisement

தற்போதைய அரசாங்கம் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்துகிறது. உண்மையில், ஹெலிகாப்டர்கள், போர் விமானம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட சாதனங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 111 இராணுவத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது மேக் இன் இந்தியாவின் வெற்றியை பறைசாற்றுகிறது.

Pradeep is a Techie, Entrepreneur and a Social Worker. He is the Co-Founder of Sixth Sense Foundation(@SixthSenseF).

Share