இந்தியா

ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவுக்காக இலண்டனில் சொகுசு பங்களா வாங்கிய விவகாரம்: தலைமறைவான உதவியாளருக்கு அமலாக்கத்துறை பிடிவாரண்ட்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், ராகுல் காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா இலண்டனில் அனுபவித்து வரும் 1.9 டாலர் மில்லியன் மதிப்புள்ள சொகுசு பங்களா தொடர்பாக தலைமறைவாகியுள்ள அவரின் உதவியாளருக்கு அமலாக்கத்துறை வாரண்ட் பிறப்பித்து இன்டர் போலீஸ் மூலம் பிடித்து இந்தியா கொண்டு வரவுள்ளது.

சமீபத்தில் ஹவாலா வழக்கு ஓன்று தொடர்பாக சஞ்சய் பன்டாரி என்ற ஆயுத தரகர் வீட்டை வருமானவரித்துறையினர் சோதனையிட்டனர். அப்போது இலண்டனில் பிரயான் சதுக்கம் என்ற இடத்தில் உள்ள 12 ஆம் எண் வீடு ஒன்றை வாங்கியுள்ளது டிஜிட்டல் ஆதாரத்துடன் தெரியவந்தது. அந்த வீடு குறித்து விசாரணை செய்தபோது அந்த வீட்டை சோனியாகாந்தி மகன் ராபர்ட் வதேரா அனுபவித்து வருவது தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை செய்ததில் இந்த பங்களாவை வதேரா மறு சீரமைப்பு செய்துள்ளார் எனவும் இதற்கான பணம் வந்தது குறித்து விசாரணை செய்ததில் இந்த பணம் ஹவாலா பணம் என்றும் வதேராவுக்காக இது இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பாக அவருடைய உதவியாளர் மனோஜ் அரோராவிடம் விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் அமலாக்கத் துறையினர் கூறினர். எனவே தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள அவரை பன்னாட்டு போலீஸ் மூலம் பிடித்துக் கொண்டு வர வேண்டி அமலாக்கத்துறை சிவப்பு வாரண்ட் பிறப்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அவரைக் கொண்டு வந்து விசாரணை செய்யும்போதுதான் இராபர்ட் வதேராவுக்குள்ள நேரடி தொடர்பு அம்பலத்துக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close