ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமே வழக்கை தள்ளுபடி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து ராகுல் காந்தி பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பதற்கு முன் A.B.C-யிலிருந்து முழு ஆவணத்தையும் வாசிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் நாட்டிற்கு தவறான தகவலை தரும் ராகுல் தலைமை பொறுப்பில் விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், ஆதாரத்துடன் பதிலடி தந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுகையில், “ராகுல் A.B.C.-யிலிருந்து வாசிக்க துவங்க வேண்டும். ராகுலை போல் பொதுமக்களை தவறாக வழி நடத்துபவர்கள், வாசிக்க தொடங்கும் முன்பே ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுவார்கள். காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பொய் தகவல்களை பரப்புவதும், மக்களை தவறாக வழிநடத்துவதும் பெரும் அவமானம். இதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு ராகுல் பதவி விலக தயாரா?”, என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எச்.ஏ.எல்.க்கு எந்த தொகைக்கு கையெழுத்திடப்பட்டது, இன்னும் எத்தனை ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்பதையும் அவர் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். இது மக்களவை ஆவணத்தின் படி என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ராகுல் காந்தி பரப்பி வந்த பொய் குற்றச்சாட்டுக்கள் சுக்குநூறாக உடைந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

Share