செய்திகள்

கர்நாடகாவில் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயி மனைவி, 4 மகள்களுடன் தூக்குப் போட்டு தற்கொலை : விவசாயிகளின் உயிரை காவு வாங்கும் கர்நாடக அரசு

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு சமீபத்தில் ₹44,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ததாக அறிவித்தது. ஆனால் இந்த தொகையை ஆளும் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியை சேர்ந்த 800 விவசாயிகளுக்கே வழங்கப்பட்டுவிட்டது என்றும், ஏழை சிறு விவசாயிகள் யாரும் பயனடையவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இந்த பாரபட்சத்தை கண்டித்து கர்நாடகாவில் பா.ஜ.க போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் மாதம் 2 ஏழை விவசாயிகள் கடன் தள்ளுபடியாகாததால் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று கோப்பால் தாலுக்கா மேட்டக்கள் கிராமத்தை சேர்ந்த 42 வயதான சேக்கரையா என்கிற ஏழை சிறு விவசாயி தனது மனைவி, மகள்களுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையும் விசாரணை நடத்தி வழக்கு பதிந்துள்ளனர். இது குறித்து அந்த கிராம மக்கள் அளித்த தகவல்கள் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. அவர்கள் கூறுகையில் சேக்கரையா ₹6 லட்சம் கடன்பட்டிருந்தார். விவசாய வங்கிகளிடமும், தனியாரிடமும் பெற்ற கடனை அடைக்க முடியாமல் இருந்தார். சமீபத்தில் செய்த பயிர் சாகுபடியும் கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தனக்கு கை கொடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் தள்ளுபடி பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கடனை கட்டக் கோரி வங்கிகளும், தனியாரும் அவரை நெருக்கி வந்தனர். வங்கிகள் நோட்டீஸ் அளித்தன. இந்த கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இந்த சம்பவம் நடந்த நேற்று கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் சிவ சங்கரரெட்டி அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அவரும் நேரில் சென்று துக்கம் விசாரித்தார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது கர்நாடகா முழுவதும் விவசாயிகளிடையே கடும் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கடந்த ஒரு மாதத்தில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் அரசுகள் செய்து வரும் போலி கடன் தள்ளுபடி திட்டங்கள் பற்றி பெருமையுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close