உயர்சாதி வகுப்பினருக்கு இதுவரை அரசு உயர் பதவிகளில், வேலை வாய்ப்புகளில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடோ அல்லது எந்த ஒரு முன்னுரிமையோ அளிக்கப்படவில்லை. மற்ற வகுப்புகளில் உள்ள ஏழை மற்றும் பணக்காரர்கள் இந்த சலுகையை அடையும் போது உயர்வகுப்பு ஏழைப் பிரிவினருக்கு மட்டும் இந்த சலுகை மறுக்கப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் இந்த பிரிவில் உள்ள உள்ள இலட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அரசு சலுகைகள் எதையும் பெற முடியாமல் பரிதவித்து வந்தன. இது குறித்து கடந்த 70 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த அரசும் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்தன.

இந்த நிலையில், மோடி சர்க்காரின் அமைச்சரவை இன்று அனைவருக்கும் சம நீதிவழங்கும் வரலாறு காணாத முடிவை எடுத்துள்ளது. அதன்படி அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தப்படி ஆண்டுக்கு ₹8 இலட்சம் வருமானத்துக்கு உட்பட்ட உயர் வகுப்பினருக்கு அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிலையங்களில் திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை கிடைக்க வகை செய்ய மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மோடி சர்க்காரின் இந்த முடிவால் நாடெங்கிலும் உள்ள, இதுவரை சமூக நீதி மறுக்கப்பட்ட இலட்சக்கணக்கான உயர்சாதியை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ள. இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share