தலைநகர் டில்லியில்பா.ஜ.தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றஅக்கட்சியின் பிரமாண்ட கூட்டத்தின்போது, 5,000 கிலோ கிச்சடி செய்துஉலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நேற்றுராம்லீலா மைதானத்தில்அமித் ஷா பங்கேற்றபிரமாண்ட கூட்டம்நடந்தது. இதில்டில்லியில் உள்ள தலித்துகளின் வீடுகளில் பெறப்பட்ட அரிசி மற்றும் பயறு வகைகளை பயன்படுத்தி, 5,000கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது.

இந்த கிச்சடிபா.ஜ.தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது.கடந்த, 2017, நவம்பரில்டில்லியில்மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தஇந்திய உணவு திருவிழாவின்போதுபிரபல சமையல் கலைஞர்சஞ்சீவ் கபூர், 918கிலோ கிச்சடிசெய்தார்.அதுஉலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.தற்போது, 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டுள்ளதுகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Share