தமிழ் நாடு

10 லட்சம் பிரசவங்களில் 7 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் – தமிழகத்தில் 9 இடங்களில் ₹180 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு ஒப்புயர்வு மையங்கள்!

தமிழகத்தில் 9 இடங்களில் ₹180 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு ஒப்புயர்வு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தீக்காய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப் பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விபத்து காய சிகிச்சை மையங்களின் மூலம் சாலைவிபத்துக்களில் இறப்பு விகிதம் 8.6 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாக குறைந்துள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன், தலா ₹20 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் 9 இடங்களில் ₹180 கோடி மதிப்பீட்டில் தாய்மார்களுக்கான ஒப்புயர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனால் பிரசவ காலங்களில் தாய்சேய் இறப்பு விகிதம் மிகவும் குறையும். இது 24 மணி நேரமும் செயல்படுவதுடன், முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களுக்கு பிறகு மூன்றாம்நிலை நகரங்களில் அமைக்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 10 லட்சம் பிரசவங்களில் 7 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

தற்கொலை முயற்சியை தவிர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக் கப்பட்டு, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை மற்றும் தஞ்சாவூரில் தலா ₹150 கோடி மதிப்பீட்டில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் உருவாக்கப்படவுள்ளது. மனித உயிர் இழப்பை தடுக்கும் வகையில் எலி பேஸ்டை தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

Show More
Back to top button
Close
Close