நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு நேரடியாக பலன் தரும் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவை பலனளிக்கத் தொடங்கியுள்ளன. வருங்கால தலைமுறையினரின் நலனைக் கொண்டு பல நீண்டகால திட்டங்களுக்கு வழி அமைப்பதற்காக முழுமையான ஆதார் திட்டம், அனைத்திலும் ஆன்லைன் முறை, கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள், டிஜிட்டல் பண பரிமாற்ற முறை, வரி ஏய்ப்பை தடுக்க ஜி.எஸ்.டி, பினாமி ஒழிப்பு சட்டம், ரியல் எஸ்டேட் சீர்திருத்த சட்டம், பொருளாதார குற்ற தடுப்பில் புதிய சட்டங்கள், வாராக்கடன் தடுப்பு சட்டம் உட்பட பல தைரியமான நடவடிக்கைகளை மோடி சர்க்கார் மேற் கொண்டது. இந்த நிலையில் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் முழு பலனை மக்கள் நீண்ட கால அடிப்படையில் அனுபவிக்க வசதியாக வரவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்பதில் பாஜக தீவிரமாக முனைந்துள்ளது.

Share