தமிழ் நாடு

மோடி சர்கார் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து வருகிறது. பிரதமர் மோடி சென்ற 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து, அனைத்து மதங்களின் ஆன்மிகத் தலைவர்களையும் உடன் வைத்துக்கொண்டு மோடியை வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப்பாண்டவர் போன்ற பிரமுகர்களுக்கு மட்டுமே இப்படி வரவேற்பளிப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே மோடியை மும்முறை கட்டித் தழுவினார். இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவு ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார் நெதன்யாகு. இந்த பயணத்தின்போது இந்தியாவுடன் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. அவற்றில் முக்கியமானது அதிக தண்ணீர் தேவை இல்லாமலும் , பூச்சித் தாக்குதல்களை எதிர்கொள்ளும், வீரிய ஒட்டுவகை காய்கறி விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகும். இந்த முறையில் தயாராகும் வீரிய ஒட்டு ரகங்களின் விளைச்சலைப் பெருக்க இந்தியாவுக்கு கொடுத்து இஸ்ரேல் உதவி செய்தது. இந்த வீரிய ரக விதைகள் மற்றும் பயிர் தொழில் நுட்பத்தை மோடி சர்க்கார் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காய்கறி நன்கு பயிரிடப்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்காக மாநில விவசாய துறைகளுக்கு அனுப்பி வைத்தது. இதன்படி திண்டுக்கல் அருகே இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்களில் கோடிக்கணக்கில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாற்றுகள் அதிக விளைச்சலை தருவதாகவும் நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் !

மோடி சர்கார் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து வருகிறது. பிரதமர் மோடி சென்ற 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து, அனைத்து மதங்களின் ஆன்மிகத் தலைவர்களையும் உடன் வைத்துக்கொண்டு மோடியை வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப்பாண்டவர் போன்ற பிரமுகர்களுக்கு மட்டுமே இப்படி வரவேற்பளிப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே மோடியை மும்முறை கட்டித் தழுவினார். இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவு ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார் நெதன்யாகு.

இந்த பயணத்தின்போது இந்தியாவுடன் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. அவற்றில் முக்கியமானது அதிக தண்ணீர் தேவை இல்லாமலும் , பூச்சித் தாக்குதல்களை எதிர்கொள்ளும், வீரிய ஒட்டுவகை காய்கறி விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகும். இந்த முறையில் தயாராகும் வீரிய ஒட்டு ரகங்களின் விளைச்சலைப் பெருக்க இந்தியாவுக்கு கொடுத்து இஸ்ரேல் உதவி செய்தது. இந்த வீரிய ரக விதைகள் மற்றும் பயிர் தொழில் நுட்பத்தை மோடி சர்க்கார் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காய்கறி நன்கு பயிரிடப்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்காக மாநில விவசாய துறைகளுக்கு அனுப்பி வைத்தது.

இதன்படி திண்டுக்கல் அருகே இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்களில் கோடிக்கணக்கில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்  இந்த நாற்றுகள் அதிக விளைச்சலை தருவதாகவும் நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Credits : NewsJ

Tags
Show More
Back to top button
Close
Close