இந்தியாதமிழ் நாடு

திமுக ஆட்சிக் காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் மின்கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன… அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன்?

800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் புதைவட மின்கம்பிகள் கண்டுபிடிக்கப்படாததால், உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர வேறுவழியில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.விளைநிலங்கள் வழியாக உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நேரடியாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய திட்டம் இது. இதில் தமிழ்நாட்டுக்கு 4 ஆயிரம் மெகா வாட், கேரளாவுக்கு 2 ஆயிரம் மெகா வாட். வழியில் எந்த மாநிலத்திற்கும் இந்த மின்சாரம் கிடையாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுமார் ஏழு ஆண்டு காலம் போராடி இந்த திட்டத்தை பெற்றிருக்கிறார்.

வளர்ந்து வரும் தமிழகத்திற்கு, எதிர்காலத்தில் மின்சாரம் அதிகம் தேவைப்படுகிறது. வருடத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்ற முடியும். மின் வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த முடியும்.இந்த பணி ஏறத்தாழ 1,766 கிலோ மீட்டர் தூரம் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாக கேரளா வரைக்கும் செல்கிறது. இதற்கான பணிகள் சத்தீஸ்கர், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிங்களில் முடிந்துவிட்டன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.தற்போது, அந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயர்மின்கோபுரம் அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

இந்த உயர் மின் கோபுரம் 800 கிலோவாட் கொண்டதாகும். ஆனால், உலகில் எந்த பகுதியிலும் 800 கிலோவாட் கொண்ட கேபிள் (புதைவடி மின்கம்பிகள்) கிடையாது. வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட அற்கான தொழில்நுட்பத்தை கண்டுப்பிடிக்கவில்லை. அப்படி ஒரு தொழில் நுட்பம் கண்டுப்பிடிக்கப் பட்டிருந்தால் தமிழத்திற்கு அதை கொண்டு வந்திருப்போம். இல்லாத தொழில் நுட்பத்தை எப்படி போடமுடியும்?.போராட்டக்குழுவோடு பல முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டது. வியாழக்கிழமை(ஜன.3) சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் கூடஇதை தெரிவித்தேன். அப்போது, இலங்கைக்கு கடலுக்கடியில் பாதை அமைக்கப்பட்டு செல்வதாக சொன்னார்கள். அதுவும் 500 மெகாவாட் தான்.

அதுவும் வரைவு திட்டம்தான். நடைமுறையில் சரியாக வருமா? என்ற ஆய்வும் செய்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், சென்னை தரமணியில் 400 கிலோ வாட் கேபிள் புதைக் கப்படுகிறது என்றும் சொன்னார் கள். அதுக்கூட அதிக தூரம் போடமுடியவில்லை. மணலியிலிருந்து தரமணிக்கு 41 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கும் மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. எதாவது ஒரு சிறு விபத்து ஏற்பட்டாலும் கேபிளில் எந்த இடத்தில் பழுது என்பதை கண்டுபிடிப்பது சிரமம். இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். மின் உயர் கோபுரமாக இருந்தால் ஒரு சில மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடலாம். விளை நிலத்தில் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்க வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் 10 கிலோ மீட்டருக்கு ஒரு இணைப்பு போடவேண்டும். அதற்காக ஒரு துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். அதற்காக 5 மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். 5 மீட்டர் ஆழத்திற்கு குழி எடுத்து கான்கிரிட் போட்டு சுவர் எழுப்ப வேண்டும். தரை அமைக்க வேண்டும். இப்படி செய்ய வேண்டுமென்றால் பத்து மடங்கு தொகையை செலவு செய்ய வேண்டும். இது சாத்தியமா?

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் மின்கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன்? விவசாயிகளை துன்புறுத்தி இந்த திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.அதேபோல், கேரளாவில் பூமிக் கடியில் கொண்டு செல்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு உள்ளிட்ட சிலர் இந்த கோரிக்கையை முன் வைத்தனர். தமிழகத்திற்கு வரும் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் கோவையில் பிரித்து கேரளாவுக்கு 2 ஆயிரம் மெகா வாட் செல்கிறது. அதில், 320 கிலோ வாட்டாக மாற்றி கொண்டு செல்கிறார்கள். அதுவும் வனப்பகுதியிலும், கொச்சி நகரத்திலும் 29 கிலோ மீட்டர் வரைக்கும்தான் பூமிக்கடியில் கொண்டு செல்கிறார்கள். கேரளாவிலும் 187 மின் உயர் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்கிறார்கள்.மின்கோபுரங்கள் அமைக்கும் இடத்திற்கான உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

பயிர் இருந்தாலும், தென்னை இருந்தாலும் தனியாக நட்ட ஈடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் தென்னை மரத்திற்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. இப்போது அந்த தொகை ரூ.32 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயிருக்கு ஏற்றாற்போல் நட்ட ஈடு தரப்படும். நிலத்திற்கு வழிக்காட்டி மற்றும் சந்தை விலைகளைக் காட்டிலும் இரண்டரை முதல் நான்கரை மடங்கு வரைக்கும் கூடுதல் விலைக் கொடுக்கப்படும். இது பயிர்களுக்கு கொடுக்கப் படும் சேதம்போக வழங்கப்படுகிறது. வாடகை வேண்டும் என்று கேட்கிறார்கள். இது மாநில அரசின் திட்டம் கிடையாது. மத்திய அரசு சட்டத்தின் படிதான் நாம் செயல்படமுடியும். வாடகை கொடுப்பது என்பது எந்த மாநிலத்திலும் கிடையாது. மத்திய அரசுதான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியமாகும்.இந்த திட்டத்திற்கு ரூ.24 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது. 4 ஆயிரம் மெகா வாட்டிற்கு என்ன செலவாகிறதோ முழுக்க முழுக்க மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மின்சாரத்தை வாங்கும் போது செலவு தொகை முழுவதும் மாநில அரசுதான் கொடுக்க வேண்டும்.

அதனால்தான் எவ்வளவு நட்ட ஈடுகொடுத்தாலும் பரவாயில்லை என்பதால் விவசாயிகளுக்கு தகுந்த விலைக்கொடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் இந்த போராட்டத்தால், ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்ட விவசாயிகள் அரசு வழங்கும் இழப்பீடு தொகையைவாங்க மறுக்கிறார்கள்.பேச்சுவார்த்தைக்கு தயார். நம் மாநிலம் வளர்ந்து வரும் மாநிலமாகும். எனவே, தமிழகத்தில் மின் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த இப்போதும் அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close