உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நலத்திட்ட விழாவில் பேசிய பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரத்தை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமேதி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 2017ல் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சி பகல் கனவு காணுகிறது. காங்கிரஸ் ஆட்சியை விட, பா.ஜ.க ஆட்சியில்தான் அமேதியின் வளர்ச்சி அதிகரித்து வந்துள்ளது. அமேதி முன்னேற்றத்துக்கு மோடி அரசு தான் காரணம். அயோத்தியா விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை வேகப்படுத்தாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share