தமிழ் நாடு

2011ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவரைத் தான் தி.மு.க திருவாரூர் வேட்பாளராக அறிவித்துள்ளது

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கலைஞரின் மறைவை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வதற்கான நேர்காணல், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில், வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என தி.மு.க அறிவித்துள்ளது.

தற்போது தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்க்கப்பட்டுள்ள இவர் 2011 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருத்துறைப்பூண்டியில் ரமேஷ் என்பவரது கடையை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பூண்டி கலைவாணன் மீது நிலுவையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என போலீஸ் தரப்பு தெரிவித்தது

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

Picture Courtesy : News 18 Tamilnadu

Tags
Show More
Back to top button
Close
Close