இந்தியாசிறப்பு கட்டுரைகள்

ரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் ஏற்கனவே கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு தனது பாணியில் அதிரடி பதில்களை தந்த ராணுவ துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையில் பல்வேறு கேள்விகளை கேட்டபோது பதில் சொல்ல தெரியாமல் காங்கிரசார் விழித்தனர். ராகுல் காந்தியும் நிர்மலா சீத்தாரானின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனார்.

ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக காங்., தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக லோக்சபாவில் இன்றுடன் 3 வது நாளாக காரசார விவாதம் நடந்தது. இன்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காங்கிரசாரின் கேள்விகளுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தார். அப்போது அவர் பேசுகையில்”  நாட்டின் அவசர தேவையை கருத்தில் கொண்டே ராணுவ தளவாடங்களை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். இதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். 2001ல் வாஜ்பாய் அரசுதான் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது.  ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரபேல் வாங்காமல் இழுத்தடித்தது ஏன் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டைய நாடுகள் ராணுவ போர்த்தளவாடங்களை அதிகரித்து வந்தது. நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டைய நாடுகளை நாம் மாற்ற முடியுமா ? கடந்த 2005 முதல் 2015 வரை சீனா 400 ராணுவ விமானங்கள் வாங்கியுள்ளன. இந்த நிலையில் நாமும் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. கார்கில் போருக்கு பின் நமது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலை வந்தது. காங்கிரசை தோல் உரிக்கும் விதமாக பல உண்மைகள் உள்ளன. தேசிய பாதுகாப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். ஆனால் காங்கிரஸ் ரபேல் விவகாரத்தில் எதையும் செய்யாமல் நாட்டின் பாதுகாப்புக்கு தடையாக இருந்து வந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காகவே ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

ரபேல் முதல் போர்விமானம் 2019 -22 க்குள் 3 ஆண்டுகளில் வந்து விடும். வரும் செப்., முதல் ரபேல் விமான உற்பத்தி துவங்கும்.36 விமானங்களும் வரும் 2022 க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். பாதுகாப்பு துறை டீலில் வேறுபாடுகள் இருக்கலாம். டீல் என்பது பாதுகாப்பானது. காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் ஒரு விதமாகவும், வெளியில் ஒருவிதமாகவும் பேசுகிறது. நாட்டு மக்களுக்கு தவறான தகவலை காங்., தருகிறது.  எச்.ஏ.எல். நிறுவனத்தை மேம்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு 1லட்சம் கோடி ஒதுக்கியது. எச்.ஏ.எல். நிறுவனத்தை மேம்படுத்த காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்தில் தயாரிக்கப்படும் போர் விமானங்கள் எண்ணிக்கையை 36 ஆக உயர்த்தியுள்ளோம்.

ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் நீர்த்து போகசெய்தது. அகஸ்டா ஹெலிகாப்டரில் கைது செய்யப்பட்ட மைக்கேலை இந்தியா கொண்டு வந்தால் அச்சப்படுகிறது. இந்த பேச்சின்போது ராகுல் மற்றும் காங்., எம்.பி.,க்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆவேசப்பட்டு சப்தம் எழுப்புவதால் உண்மையை மறைக்க முடியாது என்றார் அமைச்சர் நிர்மலா.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிர்ணயித்த விலையை விட ரபேல் விமானம் 9சதவீத விலை குறைத்து வாங்கியுள்ள்ளது. ஆனால் காங்கிரஸ் தவறான தகவலை அளிக்கிறது. ரபேல் வாங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், பல உயர் அதிகாரிகள் பங்கேற்ற 74 க்கும் மேற்பட்ட கூட்டம் நடந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் நிர்மலா காங்கிரசார் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு காங்கிரசாரால் பதில் கூற முடியவில்லை. அனைவரும் திகைத்தனர். ராகுல் காந்தி வாயடைத்துப் போனதை பார்க்க முடிந்தது.

Tags
Show More
Back to top button
Close
Close