தமிழ் நாடு

சபரிமலை விவகாரத்தில் தந்தி தொலைக்காட்சியில் தடுமாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி

சபரிமலையில் பதினெட்டு படியேறி சுவாமி ஐயப்பன் சன்னதிக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததால் கேரளா முழுவதும் ஸ்தம்பித்திருக்கிறது. இந்த சம்பவத்தை பற்றி தமிழகத்தில் உள்ள தந்தி செய்தி தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அங்கத்தில் உறுப்பினரான பாலபாரதி ஒரு நபராக பங்கேற்றார். இந்த விவாத நிகழ்ச்சியை தந்தி செய்தி தொலைக்காட்சியில் உள்ள ஹரிஹரன் நடுவராக செயல்பட்டார்.

சுவாமி ஐயப்பனின் இஸ்லாமிய தோழரான பாபர் ஸ்வாமியையும் அவரது மசூதியையும் குறிப்பிட்டு, அங்கு பக்தர்கள் செல்வதையும் குறிப்பிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் மதசார்பற்ற கோவில் என்றும் இதனால் மதம் என்ற உணர்வு முதலிலே விரட்டப்படுகிறது என்றும் பாலபாரதி கூறினார்.

இதற்கு பதிலாக நடுவர் ஹரிஹரன் எழுப்பிய கேள்வியில் பாலபாரதி திணறிப்போனார். நீங்கள் சுவாமி அய்யப்பனின் தோழரான பாபர் சுவாமி மசூதியை பற்றி கூறுகிறீர்களே, அங்கு பெண்களுக்கு அனுமதியுண்டா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் பாலபாரதி ஸ்தம்பித்து போனார்.

அதற்கு அவர் பதில் சொல்ல திணறும்போது, நடுவர் ஹரிஹரன், தமிழகத்திலிருந்து பெண்கள் பாபர் சுவாமி மசூதிக்கு சென்றால் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அந்த பெண்களுக்கு பாதுகாப்பளித்து அவர்கள் அந்த பாபர் மசூதியில் வழிபட ஏற்பாடு செய்யுமா அரசு என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு மீண்டும் தடுமாறிய பாலபாரதி ஹரிஹரன் புதியதாக ஒரு பிரச்னையை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். அதற்க்கு பதிலாக ஹரிஹரன் தான் புதிய பிரச்னையை உருவாகவில்லை என்றும் வழிபாட்டு உரிமை அனைத்துக்கும் பொதுவானது என்று கூறினார்.

இதற்கு மீண்டும் பாலபாரதி தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பினும் ஐயப்பனை அவர் மக்களின் உணர்வாக காண்கிறார் என்று கூற, அதற்க்கு ஹரிஹரன் பாபர் ஸ்வாமி மசூதிக்கு சென்றபின் சபரிமலை ஐயப்பனின் சன்னதிக்கு செல்வது மக்களின் உணர்வின் அங்கம் என்னும், அதனால் பெண் பக்தர்களும் அங்கு சென்றுவிட்டு ஐயப்பனை தரிசிக்க கேரளா அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டாதார்க்கு பாலபாரதி பதிலளிக்க தடுமாறினார். இந்த வாதம் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

 

Tags
Show More
Back to top button
Close
Close